என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "லக்னோ சூப்பர் ஜெயண்ட்"
- லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி, தனது கேப்டன் மற்றும் துணை கேப்டன் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது.
- 2024 ஐ.பி.எல். தொடரில் லக்னோ அணியின் கேப்டனாக கே.எல்.ராகுல் தொடர்வார்.
லக்னோ:
இந்தியாவில் கடந்த 2008-ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரானது இதுவரை 16 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இதன் 17-வது சீசன் இந்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தொடரில் 10 அணிகள் கலந்து கொள்ள உள்ளன.
நடப்பு ஆண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 22-ம் தேதி ஆரம்பமாகிறது. முதல் போட்டியில் சென்னை-பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. சென்னையில் நடைபெறும் இந்த போட்டியானது இரவு 8 மணிக்கு நடைபெற உள்ளது.
இந்நிலையில் ஐ.பி.எல். அணிகளில் ஒன்றான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி, தனது கேப்டன் மற்றும் துணை கேப்டன் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி 2024 ஐ.பி.எல். தொடரில் லக்னோ அணியின் கேப்டனாக கே.எல்.ராகுல் தொடர்வார். அவர் லக்னோ அணி ஆரம்பிக்கப்பட்ட சீசனிலிருந்தே அதன் கேப்டனாக செயல்படுகிறார்.
கடந்த வருட ஐபிஎல் தொடரில் காயம் காரணமாக கேஎல் ராகுல் விலகிய நிலையில் துணை கேப்டனான குர்ணால் பாண்ட்யா அணியை வழிநடத்தினார். அவர் 6 போட்டிகளில் கேப்டனாக பணியாற்றினார். இந்நிலையில் இந்த ஆண்டில் லக்னோ அணியின் துணை கேப்டனாக வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர் நிக்கோலஸ் பூரனும் செயல்படுவார்கள் என அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
- 5 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய ஆகாஷ்.
- 2018ல் இருந்து என்னுடைய வாய்ப்பிற்காகக் கடுமையாக உழைத்து வருகிறேன்.
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற பிளே ஆஃப் சுற்றின் எலிமினேட்டர் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோவை வீழ்த்தி அபாரமாக வெற்றிப்பெற்றது.
அடுத்தடுத்து ஏற்பட்ட ரன் அவுட் உள்ளிட்ட காரணங்களால் லக்னோ அணி 16.3 ஓவரில் அனைத்து விக்கெட் இழப்பிற்கு 101 ரன்களிலேயே ஆட்டத்தை இழந்தது.
இதில், மும்பை அணி சார்பில் அதிகபட்சமாக ஆகாஷ் மேத்வால் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார். 5 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்து வீச்சாளர் ஆகாஷ் மத்வால், அனில் கும்ப்ளேவின் சாதனையை சமன் செய்துள்ளார்.
இதுகுறித்து ஆகாஷ் மத்வால் கூறியதாவது:-
என்னுடைய இந்த வாய்ப்புக்காகத்தான் காத்திருந்தேன். நான் இன்ஜினியரிங் படித்துள்ளேன். ஆனால் என்னுடைய விருப்பம் கிரிக்கெட்டாக இருந்தது. 2018ல் இருந்து என்னுடைய வாய்ப்பிற்காகக் கடுமையாக உழைத்து வருகிறேன். வரும் போட்டிகளில் சிறப்பாகச் செயல்படுவேன் என்று நம்புகிறேன். இன்ஜினியர்கள் விரைவாக கற்றுக்கொள்பவர்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்